192
யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் ஆலயம் விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது.
குறித்த ஆலயத்தினை நேற்று இரவு விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
அந்நிலையில் இன்றைய தினம் காலை ஆலயம் இடித்தழிக்கப்பட்டதை அயலவர்கள் கண்ணுற்று அது தொடர்பில் கொடிகாம காவல்துறையினருக்கு அறிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love