மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனா். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்ற நிலையில் இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் முதல்கட்டமாக 9 பேர் உயிரிழந்திருந்தனர்.
தற்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதனால், மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.