Home உலகம்ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று உலக சாதனை

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று உலக சாதனை

by admin

,தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று புதிய உலக சாதனையை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா நாட்டின் கவ்டேங் மாகாணத்தில் உள்ள டெம்பிஸா கிராமத்தைச் சேர்ந்த டெபோகோ சொடேட்ஸி – கோஸியாமே தமாரா தம்பதினா் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்திருந்தனா்.

இவர்களுக்கு 6 வயதில் ஏற்கெனவே இரட்டைக் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 37 வயதான கோஸியாமே தமாரா தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளாா். இவற்றில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் இடங்குகின்றனா். தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக அவரது கணவர் டெபோகோ தெரிவித்துள்ளாா்.

இதற்கு முன்பாக, மாலி நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த மாதம் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று உலக சாதனை படைத்தார். தற்போது இந்த சாதனையை கோஸியாமே முறியடித்திருக்கிறார். கோஸியாமேவின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் விரைவில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More