Home இலங்கைபயணத் தடை 21 ஆம் திகதி வரை நீடிப்பு

பயணத் தடை 21 ஆம் திகதி வரை நீடிப்பு

by admin

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் பயணத் தடை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், பயணத் தடை காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகளுக்கு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அதன்படி, ஆடைத் தொலிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், வார சந்தை, கரிம உர உற்பத்தி நடவடிக்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவா் தொிவித்துள்ளாா்.

அதேபோல், வங்கி மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More