160
இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளுக்கான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாட்டை பஹ்ரைன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
கொவிட் வைரஸ் தொற்று காரணமாக சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு இவ்வாறு அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நாடுகளில் உள்ள பஹ்ரைன் நாட்டு பிரஜைகளுக்கு இந்த தடை செல்லுபடியாகதென தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love