Home இலங்கைஇலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

by admin


சர்வதேச கடலில் மீன்பிடிக்கு சென்ற இந்நாட்டு மீனவர்கள் சிலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கடற்படைச் சிப்பாய்கள் சிலர் போதைப்பொருள் கேட்டு தம்மை இவ்வாறு தாக்கியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் நேற்று (17.06.21) பிற்பகல் இரண்டு படகுகளில் திக்ஓவிட துறைமுகத்தை சென்றடைந்தனர்.. இதன்போது, கடுமையான தாக்குதலுக்கு உள்ளான மூவர் நீர்க்கொழும்பு தள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 7 ஆம் திகதி இரண்டு படகுகளில் 13 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 4 ஆம் திகதி இந்திய கடற்படை வீரர்கள் சிலர் தமது படகில் ஏறி தம்மை தாக்கியதாகவும், தாக்குதலுக்கு பின்னர் படகில் இருந்த பதிவு செய்யும் உபகரணத்தையும் அவர்கள் சேதப்படுத்திச் சென்றதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More