Home இலங்கைதமிழகத்தில் பிரவேசித்த இலங்கையர் 34 பேரிடமும் விசாரணை!

தமிழகத்தில் பிரவேசித்த இலங்கையர் 34 பேரிடமும் விசாரணை!

by admin

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில், கனடா செல்ல தமிழகத்துக்குள் ஊடுருவிய இலங்கைத் தமிழர்கள் மங்களுரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வரை மங்களூர் தனிப்படை காவற்துறையினர் வேதாளை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, நேற்று (20.06.21) விசாரணை செய்தனர். மேலும், தமிழகத்துக்குள் ஊடுருவிய இலங்கைத் தமிழர்கள், தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர், தலைமறைவானதால் அவர் குறித்தும் மங்களூர் தனிப்படை காவற்துறையினர் மரைக்காயர்பட்டிணத்தில் தீவிர விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 34 பேர், சட்டவிரோதமாக கனடா செல்வதற்காக, புத்தளம் கடற்கரையில் இருந்து கடந்த மாதம் 27ஆம் திகதி புறப்பட்டனர்.
அவர்கள், மறுநாள் அதிகாலை இராமநாதபுரம் மாட்டம் இராமேஸ்வரத்தை அடுத்துள்ள வேதாளை கடற்கரையை சென்று சேர்ந்தனர்.

பின்னர் வேதாளையில் இருந்து மங்களூர் சென்று கடல் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது, இம்மாதம் 11ஆம் திகதி மங்களூர் காவற்துறையினரால் 34 இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட 34 இலங்கை தமிழர்களில் நான்கு பேரை மட்டும் காவற்துறை காவலில் எடுத்த மங்களூர் காவற்துறையினர் அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களைத் திரட்டுவதற்காக விசராணை நடத்தி வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More