Home இலங்கைவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி

வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி

by admin

மட்டக்களப்பு சின்னஊறணி பகுதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ஒருவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளாா்.

இன்று (21) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மணல் லொறியொன்றின் சாரதியே உயிாிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தொிவித்துள்ள அவா் சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக குறித்த மணல் லொறி சாரதியுடன் காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் விளைவாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாகவும் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் .அவா் தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More