உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து மூன்று வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹன் டி சில்வா தெரிவித்துள்ளார்.
குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் மூவரையும் உடனடியாக நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று குழுக்கூட்டத்திலே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் குறித்த மூன்று வீரர்களும், குமிழி பாதுகாப்பை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது