Home பிரதான செய்திகள்25 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தும் 29 ஆண்டுகளுக்குப் பின் டென்மார்க்கும் அரையிறுதிக்குள்

25 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தும் 29 ஆண்டுகளுக்குப் பின் டென்மார்க்கும் அரையிறுதிக்குள்

by admin

25 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கால்பந்துக்கிண்ண போட்டியின் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இங்கிலாந்து அணி அரையிறுதி போட்டியில் டென்மார்க் அணியுடன் போட்டியிடவுள்ளது.


நேற்றையதினம் ரோம் நகரில் உள்ள ஸ்டேடியா ஒலிம்பி்க் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் அணியை 0-4 என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

கடந்த 1996-ம் ஆண்டு கடைசியாக அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றிருந்ததன்பின் 25 ஆண்டுகளுக்குப்பின் இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேவேளை செக் குடியரசை வீழ்த்திய டென்மார்க், 1992-ம் ஆண்டுக்கு பின்னா் 29 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளமையும் . குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More