பிரித்தானியாவில் பெரும்பாலான முடக்க கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில் பிரதமர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
இதற்கமைய, முகக்கவசம் அணிய வேண்டிய நடைமுறையை பின்பற்ற வேண்டியது சட்ட ரீதியாக கட்டாயமில்லை என்ற போதிலும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் சுமார் 16 மாதங்களாக நடைமுறையிலிருந்த வீடுகளிலிருந்து பணிபுரியும் முறைமை நீக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள பிரதமர் முடக்கத் தளர்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையின் இறுதிக் கட்டம், எதிர்வரும் 19 ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
தற்போதைய கொவிட் தொற்று நிலைமை தொடர்பான தரவுகளை ஆராய்ந்து, எதிர்வரும் 12 ஆம் திகதி இவற்றினை உறுதிப்படுத்தவுள்ளதாக தொிவித்துள்ள பிரதமர் எனினும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களுக்கான சுயதனிமைப்படுத்தல் நடைமுறை தொடருமெனவும் அறிவித்துள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பிாித்தானியா மற்றும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜெர்மனி அரசு நேற்று நீக்கியுள்ளது.
டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் பிாித்தானியா மற்றும் இந்தியா, அதிகமாக இருந்தாலும், பிாித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் முடக்கக் கட்டப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளதையடுத்து ஜெர்மனி நேற்று இந்த அறிவிப்புபினை வெளியிட்டுள்ளது.