அமெரிக்காவை தாக்கிய வரலாறு காணாத வெப்ப அலையினால் 200 பேர் வரையில் உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதிகளை கடுமையான வெப்ப அலை தாக்கி வருகிறது. நாடு முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை 46 டிகிரி செலியஸ் பதிவாகியுள்ளதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 116 பேரும், வோஷிங்டனில் 78 பேரும் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அதைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதில் தங்களின் தலைகளை நனைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.
மேலும், மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும் எனவும் குளிர்சாதன அறைகளில் இருக்குமாறும், அதிக அளவு தண்ணீரை அருந்துமாறும் அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அதேவேளை கனடாவின் பசிபிக் கடற்கரையில் 100 கோடிக்கும் அதிகமான கடல் விலங்குகள் வெப்ப அலைகளால் இறந்திருக்கலாம் என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியலாளர் கிறிஸ்டோபர் ஹார்லி கூறியுள்ளார்.
தட்பவெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே பல வியத்தகு வானிலை நிகழ்வுகள், பெரிய வெள்ளம், காட்டுத் தீ போன்ற பல இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன என அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.