பிரதான செய்திகள் விளையாட்டு

2வது முறையாக இத்தாலி சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது

லண்டனில் நடைபெற்ற 6-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை வென்று இரண்டாவது முறையாக இத்தாலி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற இந்தப்போட்டியின் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்திருந்த நிலையில் .அதன்பின் யாரும் கோல் அடிக்காததனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டததில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்று சம்பியனானது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.