Home இலங்கைகொட்டகலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

கொட்டகலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

by admin

(க.கிஷாந்தன்)

திம்புள்ள – பத்தனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (12.07.2021) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான வான் ஒன்றுடன், வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுங்காயமைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக விபத்தில் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பத்தனை காவல்துறையினா் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More