உலகம் பிரதான செய்திகள்

சுதந்திரதின அணிவகுப்பு வேளை காதலிக்கு மோதிரம் அணிவித்து கவனத்தை ஈர்த்த இளம் படைவீரர்!

பிரான்ஸின் சுதந்திர தின அணிவகுப்பு கள் இன்று காலை ஆரம்பமாக இருந்தசமயத்தில் இளம் படைவீரர் ஒருவர் தனது காதலியை அழைத்து அவருக்கு மோதிரம் அணிவித்துத் தனது காதலை உறுதிப்படுத்திக் கொண்டார்.

புகழ்பெற்ற Avenue des Champs-Élysées தெருவில் படைவீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்பாக-யாரும் எதிர்பாராத விதமாக-நடைபெற்ற அந்தக்காதல் நிச்சயதார்த்தக் காட்சிகள் பிரெஞ்சுத் தரைப்படையின் ருவீற்றர்தளத்தில் வெளியிடப்பட்டு அந்த ஜோடிகளுக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் அந்தக்காட்சிகள் சமூகவலைத் தளங்களில்வேகமாகப் பகிரப்பட்டன. Avenue des Champs-Élysées தெருவின் மையத்தில் அந்த வீரர் முழந்தாளிட்டு காதலியின் கையைப் பற்றி மோதிரம்அணிவித்த போது அனைவரும் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரான்ஸின் Morbihan இல் உள்ள இளம்இராணுவ வீரர்களுக்கான பயிற்சிக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு நாட்டின் சுதந்திரத் திருநாள் நிகழ்வில் தனது காதலை வெளிப்படுத்திவாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.

———————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.14-07-2021

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.