Home இலங்கைகோப்பாய் காவல்துறையினரின் விசேட நடவடிக்கையில் 09 பேர் கைது

கோப்பாய் காவல்துறையினரின் விசேட நடவடிக்கையில் 09 பேர் கைது

by admin

கோப்பாய் காவல்துறைப் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.

அவர்களில் மூவர் அண்மைய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று காவல்துறையினா் கூறினர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த லியனகேயின் வழிகாட்டலிலும் அவரது பங்கேற்புடனும் மூத்த காவல்துறை அத்தியட்சகர் மற்றும் கோப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரியின் பங்களிப்புடன் இந்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 22,23 மற்றும் 25 வயதுடைய மூவர் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய 6 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More