236
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த த.நிரோஷன் (வயது 25) என்பவரே படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழுவொன்று வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
அதில் படுகாயமடைந்த இளைஞனை வீதியால் சென்றவர்கள் மீட்டு தெல்லிப்பழை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
Spread the love