Home இலங்கைதொண்டமனாறு கடற்பரப்பில் 250 கிலோ கஞ்சா மீட்பு – மூவர் கைது

தொண்டமனாறு கடற்பரப்பில் 250 கிலோ கஞ்சா மீட்பு – மூவர் கைது

by admin

தொண்டைமானாறு கடற்பரப்பில் படகு ஒன்றில் கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 6 சாக்குகளில் பொதியிடப்பட்ட சுமார் 250 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகு ஒன்றில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த போதே இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் குறிப்பிட்டனர். வளலாயைச் சேர்ந்த 22, 30 மற்றும் 36 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More