176
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இன்று முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இன்று 166 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.
வல்வெட்டித்துறை வடமேற்கு (ஜே/388) கிராம அலுவலகர் பிரிவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் வசிக்கின்றனர்
Spread the love