Home இலங்கைதவறிழைத்த காவல்துறையினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தவறிழைத்த காவல்துறையினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் கடமையாற்றும் அதேவேளை, ஒரு சில காவல்துறை அதிகாரிகளும் உத்தியோகத்தர்கள் பணத்துக்காக வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.
என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.


கோப்பாய் பகுதியில் இளைஞர் ஒருவரை வானின் கடத்திச் சென்று காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்கரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.


“ஒரு சிலரின் தேவைக்காக பணத்தைப் பெற்று காவல்துறையினர் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன், குற்றச்சாட்டு எழுந்துள்ள காவல்துறை உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமல்ல நாடுமுழுவதும் அமைதியையும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப காவல்துறையினர் தமது கடமையை செய்துவரும் நிலையில் இவ்வாறான சில காவல்துறை அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தவறான வகையில் செயற்படுகின்றமை வருந்தத்தக்கது” என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த லியனகே கூறினார்.


கோப்பாய் காவல்துறை பிரிவில் கடந்த வியாழக்கிழமை “ஹயஸ்” ரக வாகனத்தில் வந்த பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடையில் இருந்த கும்பல் ஒன்று இளைஞன் ஒருவரைக்  கடத்தி சென்று சித்திரவதை புரிந்து கைத்துப்பாக்கியால் தாக்கி வீதியில் வீசிவிட்டு சென்றது. 


அந்தச் சம்பவத்தில் கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளமை தொடர்பில் தாக்குதலுக்குள்ளான இளைஞனால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More