Home இலங்கைஇஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதும் திறமை இல்லை

இஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதும் திறமை இல்லை

by admin

தனக்குத் தெரிந்த வரையில் தன்னுடைய தங்கையான இஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதும் திறமை இல்லை என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகம சிறுமியின் சகோதரனான திருபிரசாத் தெரிவித்துள்ளார்.

இஷாலினி , அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பு வரையில் மட்டுமே கல்விப்பயின்றார் எனவும் தனக்குத் தெரிந்தவகையில், ஏதாவது ஒன்றை பார்த்துகொண்டு எழுதும் திறமை தனது தங்கையிடம் இருக்கிறது என்ற போதிலும் ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வல்லமை அவாிடம் இல்லை எனவும் திருபிரசாத் தொிவித்துள்ளாா்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் தங்கவைக்கப்பட்ட அறையில், ஆங்கிலத்தில், ‘எனது மரணத்துக்கு காரணம்” என எழுதப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More