Home இலங்கையாழில்.30 வயதிற்கு மேற்பட்ட 75வீதமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்

யாழில்.30 வயதிற்கு மேற்பட்ட 75வீதமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 சதவீதமானோர் கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். இன்றுடன் 30 வயதுக்கு மேற்பட்ட 2 லட்சத்து 61 ஆயிரத்து 112 பேர் கொவிட்-19 தடுப்பூசியில் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர்.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். மேலும் 50 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரம் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு முதலாவது தடவை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 50 ஆயிரம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

தற்போது 3 ஆம் கட்டமாக இரண்டு இலட்சம் பேருக்கு முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் 9ஆவது நாளும் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ரீதியாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இன்றைய 9ஆவது நாளில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மற்றும் வைத்தியசாலைகளில் என 7 ஆயிரத்து 866 பேர் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More