Home இலங்கைதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கொடி நாளை – உள்வீதியிலையே திருவிழா

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கொடி நாளை – உள்வீதியிலையே திருவிழா

by admin

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாக்கள் உள் வீதியில் மட்டுமே நடைபெறவுள்ளது. மகோற்சவ காலங்களில் உபாயக்காரர்கள் மட்டுமே ஆலயத்தினுள் அனுமதிக்கப்பட்டு , துர்க்கை அம்மன் உள் வீதியுலா மட்டுமே வலம் வரவுள்ளார். 
ஆலய சூழலில் காவடிகள் , அங்க பிரதஷ்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 


அத்துடன் வியாபார நிலையங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
முதியவர்கள் , குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து அடியவர்களும் வீடுகளில் இருந்து அம்மனை வழிபடுமாறும் , மகோற்சவம் மிக அமைதியாக நடைபெறுவதற்கு ஒத்துழைக்குமாறும்  ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More