171
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முதல் உடநிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதனால் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேவேளை, கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியை விலகுவதாக அவர் அறிவித்த போதும் தமிழ் அரசுக் கட்சியினால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Spread the love