Home இலங்கைகொழும்புத்துறை கடலில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

கொழும்புத்துறை கடலில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

by admin

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடலில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த இமானுவேல் செபஸ்டியன் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


வழமை போன்று இன்றைய தினமும் அதிகாலை 5.30 மணியளவில் கடலில் குளிக்க சென்ற அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடி சென்ற போது , அவர் உயிரிழந்த நிலையில் கடற்கரையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More