Home இலங்கையாழில். 24மணி நேரத்தில் நால்வர் கொரோனோவால் மரணம்

யாழில். 24மணி நேரத்தில் நால்வர் கொரோனோவால் மரணம்

by admin

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச்  சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர்  உயிரிழந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்த நிலையில் பிசிஆர் பரிசோதனையில் கொவிட்-19 நோய்த் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145ஆக உயர்வடைந்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More