Home இலங்கைபருத்தித்துறையில் காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம்

பருத்தித்துறையில் காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம்

by admin

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டம் ஒன்று இடப்பெற்றது.

இதன்போது நில அளவை மேற்கொள்ள வந்த நில அளவையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நில அளவை மேற்கொள்ள செல்லவிடாது வீதிக்கு குறுக்கே இருந்து தடுத்து நிறுத்தியதுடன் குறித்த காணிகளை இராணுவத்திற்க்கு வழங்க விடமாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியிருந்தனர்.

போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்க்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்ததற்க்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் எழுதி நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்ற நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More