Home இலங்கைகைதடி முதியோர் இல்லத்தில் 48 முதியவர்களில் 41 பேருக்கு கொரோனா

கைதடி முதியோர் இல்லத்தில் 48 முதியவர்களில் 41 பேருக்கு கொரோனா

by admin

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 41 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இன்று 98 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 28 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 28 பேரையும் அவர்களது உடல்நிலையைக் கணித்து ஒரு பகுதியினர் வீடுகளில் பராமரிக்கவும் மற்றொரு பகுதியினர் கோவிட்-19 இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் கண்காணிக்கவும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் 48 முதியவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 41 பேருக்கு கோவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவரையும் வட்டுக்கோட்டை மற்றும் கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More