Home இலங்கைஊரடங்குச்சட்டம் மேலும் நீடிப்பு

ஊரடங்குச்சட்டம் மேலும் நீடிப்பு

by admin

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தினை எதிர்வரும் 13ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கூடிய கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக , சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 20 ஆம்திகதி முதல் 30 ஆம்திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நீடிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More