Home இலங்கைபல்வேறு கடிதங்களால் நிரம்பிய, UNHRCகூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ளது!

பல்வேறு கடிதங்களால் நிரம்பிய, UNHRCகூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ளது!

by admin

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (13.09.21) இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதன் போது மனித உரிமை கூட்டத் தொடரின் 46 வது கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளார்.

கூட்டத் தொடரின் 47 உறுப்பு நாடுகளும் இதனை முன்வைக்க உள்ளன. இது தொடர்பிலான கருத்தாடல்களும் இடம்பெறவுள்ளன. இதன் போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல கருத்துக்களை முன்வைக்க உள்ளதுடன் அரசாங்கம் சார்பில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி இது தொடர்பில் விடயங்களை முன்வைக்க உள்ளார்.

இலங்கையைத் தவிர ஆப்கானிஸ்தான், நிக்கரகுவா, எத்தியோப்பியா, மியன்மார் மற்றும் யெமன் போன்ற நாடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பிலும் ஆணையாளர் தனது கருத்துக்களை முன்வைப்பார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More