Home இலங்கைவடக்கில் நேற்று 159 பேருக்கு தொற்று கண்டறிவு – 7 பேர் உயிரிழப்பு

வடக்கில் நேற்று 159 பேருக்கு தொற்று கண்டறிவு – 7 பேர் உயிரிழப்பு

by admin

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் நேற்று வியாழக்கிழமை  தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளமை சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாகாணத்தில் 159 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

செப்ரெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்த நிலையில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 61 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 39 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 18 தொற்றாளர்களும் மன்னாரில் 5 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்து 953 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 649 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 711 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 366 பேர் உயிரிழந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More