Home இலங்கைபோதைப்பொருளுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

போதைப்பொருளுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

by admin

நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை ஒரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.

நேற்றிரவு திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்த நால்வர் சோதனையின் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புகாவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் 2 கிராம் 94 மில்லிக்கிராமும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளில் அவர்களில் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் வசிக்கும் 28 வயதுடைய முத்து என்று அழைக்கப்படும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார். மற்றைய மூவரும் 19 வயதுடையவர்கள்.

முதன்மை சந்தேக நபரான முத்து என்பவர் நாட்டில் உள்ள பிரபல போதைபொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சந்தேக நபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

முதன்மை சந்தேக நபருக்கு நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புள்ளதா? என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவரை காவல்துறை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க ஒக்டோபர் முதலாம் திகதிவரை அனுமதியளிக்குமாறு காவல்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.

காவல்துறையினாின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான், முதன்மை சந்தேக நபரை வரும் 28ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More