இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1300 கிலோ மஞ்சள் பாசையூர் பகுதியில் வைத்து காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாசையூர் பகுதிக்கு படகில் மஞ்சள் கடத்தி வரப்படுவதாக யாழ்ப்பாண காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மஞ்சளை சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்