அரசாங்கம் கடந்த 20 மாதங்களில் 125,747 கோடி ரூபாயை அச்சடித்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன், வரையறையின்றி பணம் அச்சிடப்பட்டுள்ளமையால் பாரிய நிதி நெருக்கடிக்குள் இலங்கையை தள்ளியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் போன்ற அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் ஊடாக உதவிகளைப்
பெறாமல், அரச சொத்துக்களை விற்பது, தமது நண்பர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான
வாய்ப்பை வழங்கி திறைசேறியை வெறுமையாக்குதல் போன்ற காரணங்களால் நாட்டின்
பொருளாதாரம் மீண்டும் மீண்டும் பாதாளத்திலேயே விழும் என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய, 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கை
மத்திய வங்கியிடமிருற்த அரசாங்க திறைசேறியின் கணக்கு மற்றம் திறைசேறி பிணைமுறியின் மதிப்பு 74.74 பில்லியன் ரூபாயாகும். அது 2021 செப்டம்பர் மாதம் நேற்று (30) வரை 1,3332.21 பில்லியன்களாகியுள்ளன.20 மாதங்களுக்கு அச்சிடப்பட்டுள்ள நிதி 1,257.47 பில்லியனாகும்.
அஜித் நிவ்ராட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், இதுவரை 4784
கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் பணமானது மத்தள விமான நிலையத்தை
அமைப்பதற்கு செலவான நிதிக்கு அண்மித்த தொகை என்றார்.
2019ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், தனவந்த வர்த்தகர்களுக்கு வரி நிவாரணம்
வழங்கப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்தின் வருமானம் பாரியளவு வீழ்ச்சியடைந்து
தற்போதைய நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.
தனவந்தர்களுக்கு வரி நிவாரணத்தை வழங்கியதால் ஏற்பட்ட வருமான இழப்பை
அடைத்துக்கொள்ள நாட்டின் டொலர் இருப்பை கடன் செலுத்த பயன்படுத்தியுள்ளனர். டொலர்
இருப்பு இழக்கப்பட்டதால் எரிபொருள் இறக்குமதிக்காக டொலர் செலுத்துவதை
கட்டுப்படுத்தியுள்ளது.
டொலர் இழப்புக்கு பரிகாரமாக உரம், மருந்து, உணவுப் பொருள்கள், இலத்திரணியல்
உபகரணங்கள் உள்ளிட்டவைகளின் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கத்துக்கு
நேர்ந்துள்ளது. அதன் பலனாக இன்று நாடு முழுவதும் வரிசைகளை காணக் கூடியதாகவுள்ளது
என்றார்.