Home பிரதான செய்திகள்பிளேஒப் சுற்றுக்குள் முதலாவதாக நுழைந்த சென்னைஅணி

பிளேஒப் சுற்றுக்குள் முதலாவதாக நுழைந்த சென்னைஅணி

by admin

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றையதினம் நடைபெற்ற 44 வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஒப் சுற்றில் நுழைந்துள்ளது.

இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பினை தொிவு செய்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்களைகளை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 135 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவா்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஒப் சுற்றுக்கு முதல் அணி யாக நுழைந்துள்ளது

இதேவேளை இன்றையதினம் டுபாயில் நடைபெறவுள்ள கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More