Home இலங்கைகொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – கிளிநொச்சி வாசி உயிரிழப்பு

கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – கிளிநொச்சி வாசி உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்த்துள்ளார்..  கிளிநொச்சி அம்பாள்புரத்தை  சேர்ந்த அ. சுரேஷ்குமார் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். 


மிருசுவில் பகுதியில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 


பட்டா வாகனத்தை மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,  சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விபத்து தொடர்பில் கொடிகாமம்  காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More