Home உலகம்முகமது நபியின் கார்ட்டூனை வரைந்தவா் விபத்தில் பலி

முகமது நபியின் கார்ட்டூனை வரைந்தவா் விபத்தில் பலி

by admin

முகமது நபியின் கார்ட்டூனை வரைந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் வீதிவிபத்தில் மரணமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்தததாகவும் . இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு காவலர்களும் உயிரிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.. குறித்த விபத்தில் சதி ஏதேனும் இ உள்ளதா என்பது குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.

டென்மார்க் செய்தித்தாள் முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிட்ட அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கார்ட்டூன் வரைந்ததைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

2007-ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அல்-கய்தா இயக்கம் அவரது உயிருக்கு 1 லட்சம் டொலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More