Home உலகம்வெளிநாட்டு பயணிகளுக்கு, அமெரிக்கா தன் எல்லைகளை திறக்கவுள்ளது!

வெளிநாட்டு பயணிகளுக்கு, அமெரிக்கா தன் எல்லைகளை திறக்கவுள்ளது!

by admin

வெளிநாட்டு பயணிகளுக்கு நவம்பர் மாதத்தில் இருந்து அமெரிக்கா தன் எல்லைகளை திறக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

அதோடு, பயணத்திற்கு 3 நாட்கள் முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.

மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குழந்தைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More