
முதலில், ஒரு நாட்டில் நேர்மையான அமைச்சரவை இருக்க வேண்டும் . நாட்டின் தலைவர் மட்டும் எவ்வளவு தூய்மையானவராக இருந்தாலும், நேர்மையானவராக இருந்தாலும், ஒரு வெற்றிகரமான தலைவராக இருந்தாலும் பிரயோசனம் இல்லை என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க தன்னுடைய ஆட்சி காலத்தில், ஒரு நேர்மையான அமைச்சரவையைக் கொண்டிருந்ததால், தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் ஓர் உண்மையான ஜனரஞ்சக தலைவராக, அவர் மாற முடிந்தது என்றும், மைத்திரி கூறினார்.
சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 21ஆவது நினைவு தினம், இன்று (10.10.21) கட்சி தலைமையகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment