Home இலங்கைதன்னை கடித்த நாக பாம்பை பிடித்துக்கொண்டு வைத்திய சாலை சென்ற 15 வயது சிறுவன்!

தன்னை கடித்த நாக பாம்பை பிடித்துக்கொண்டு வைத்திய சாலை சென்ற 15 வயது சிறுவன்!

by admin

யாழ்.சாவகச்சோியில் நாக பாம்பு கடிக்கு இலக்கான 15 வயது சிறுவன், தன்னை கடித்த நாக பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், சிகிச்சைக்காக குறித்த சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

யாழ்.சாவகச்சோி நுணாவில் பகுதியில் 15 வயதான குறித்த சிறுவன் நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து கடித்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்துக் கொண்டு சாவகச்சோி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன்போதே சிறுவனை கடித்தது நாக பாம்பு என தொியவந்துள்ளது. இதனையடுத்து பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருக்கின்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More