172
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக, இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் அடிப்படையில், குறிப்பாக பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கை மூலம், இந்த கடன் பெறப்படுவதாகவும், அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Spread the love