172
யாழ்.நவாலியில் உள்ள வீடொன்றின் வேலிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இருவர் மானிப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நவாலி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் வேலி நேற்று முன்தினம் இரவு தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தது. குறித்த வேலி சில நாட்களுக்கு முன்பே கட்டப்பட்டதாகும்.
இந்நிலையில் வேலிக்கு தீ வைத்த விசம செயல் தொடர்பாக வீட்டு உரிமையாளரினால் மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த காவல்துறையினா் 19வயது, மற்றும் 21 வயதான இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
Spread the love