முல்லைத்தீவு – முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் வீடொன்றிலிருந்து, இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான பாணுகாந் என்ற இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் அறைக்குள் தாயின் துப்பட்டா கழுத்தில் இறுகி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்