328
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது, கொடூர தாக்குதல் நடத்திய காவற்துறை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என, காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தில் இளைஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதோடு குறித்த அதிகாரி தற்சமயம் பணிநீக்கமும் செய்யப்பட்டிருக்கின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love