Home இலங்கைதனக்கிளப்பில் டிப்பர் – பட்டா விபத்து – ஆறுபேர் படுகாயம்

தனக்கிளப்பில் டிப்பர் – பட்டா விபத்து – ஆறுபேர் படுகாயம்

by admin

யாழ்.சாவகச்சோி – தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. 

சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More