Home இலங்கைஹம்பாந்தோட்ட கடற்பரப்பிற்குள் சீன உரக்கப்பல் நுழைந்ததா?

ஹம்பாந்தோட்ட கடற்பரப்பிற்குள் சீன உரக்கப்பல் நுழைந்ததா?

by admin

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் இலங்கை கடப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வௌியிடப்படவில்லை என துறைமுக மாஸ்டர் கெப்டன் நிர்மால் த சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் இலங்கை கடப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக கடற்படையின் தரவுகள் உள்ளடங்கிய ´பீல்ட்மேன்´ இணையதளத்தில் ´சொய்யோ எக்ஸ்பேளர்´ எனும் கப்பல் ஹம்பாந்தோட்ட கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த கப்பல் எந்த துறைமுகத்தில் இருந்து பயணித்தது என்பது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

சர்ச்சைக்குரிய இந்த கப்பல் தொடர்பில் துறைமுக அதிகாரிகள் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக துறைமுக மாஸ்டர் கெப்டன் நிர்மால் த சில்வா தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More