Home இலங்கைஎதிர்ப்பு காரணமாக கீரிமலை காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது

எதிர்ப்பு காரணமாக கீரிமலை காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது

by admin

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான  சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டன. 

கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் இன்றைய தினம் காலை குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் அளவிட்டு பணிகளுக்காக வந்திருந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் , உத்தியோகஸ்தர்கள் திரும்பி சென்றிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More