Home இந்தியா“இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்லர் – கடலே நம்மைப் பிரிக்கிறது.”

“இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்லர் – கடலே நம்மைப் பிரிக்கிறது.”

by admin

இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும், அவர்கள்  ஆதரவற்றவர்கள் அல்ல எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்காக 142 கோடி ரூபாய் செலவில் 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டியபின் உரையாற்றிய அவர்,  

ஒவ்வொரு முறை திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. திராவிட முன்னேற்றக்கழகமே இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே  கட்சி எனவும்,  கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்காக எந்த திட்டங்களையும் செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும்.”  

“தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்களே.  நாம் அனைவரும் தமிழினத்தை சேர்ந்தவர்கள், கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும்.”

“தி.மு.க., அரசாங்கம்  இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரியு்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More