Home இலங்கையாழ்.மாவட்ட கிராமத்திற்கு 2 காவல்துறை உத்தியோகத்தர்கள்

யாழ்.மாவட்ட கிராமத்திற்கு 2 காவல்துறை உத்தியோகத்தர்கள்

by admin

கிராமத்தை நோக்கிய காவல்துறை சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று(02) ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமத்துக்கு இரண்டு காவல்துறைஉத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் இருவரும் அந்தக் கிராம சேவையாளர் பிரிவில் வாரத்தில் மூன்று நாள்கள் சேவையில் ஈடுபடவேண்டும்.

கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிதல் பிணக்குகளைத் தீர்த்துவைத்தல் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை அந்தக் கிராமத்துக்கு கடமைக்கு அமர்த்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் முன்னெடுப்பார்கள்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் தலைமையகப் காவல் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து வருகை தந்த மூத்த பிரதி காவல்துறைமா அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள காவல்துறைஅதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா முயற்சி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More