இலங்கையில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக, குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இ தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரிக்காக, கடவுச்சீட்டுக்களைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும், ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவான சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,000 விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன.